வந்தேறிக் கூட்டத்தின் புதிய கண்டுபிடிப்பு!
மஹாஜனங்களே...!
சகோதரர் கால்காரி சிவா அவர்கள் அரேபியாவிற்கு போனாராம். இந்தியாவிலிருந்து தினம் தினம் போய்க் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான இந்தியரைபோல நாலு காசு பார்ப்பதற்காகவும், அங்குள்ள அரபிகள் இவர் செய்யும் வேலைக்கு அதிக கூலி தருவதால் (பாயிண்ட் நம்பர் 1. உழைப்புக்கு ஊதியம் அதிகம்). பெட்டி படுக்கை இத்யாதிகளுடன் போய் இறங்கினாராம். அங்கு போனவுடன் அங்குள்ள அரபிகளில் 99 சதவீதம் பேரும் மஹா அயோக்கியர்கள் என்று கண்டு கொண்டாராம். உடனே என்ன செய்தார் என்று நினைக்கிறீர்கள்? பெட்டி படுக்கையுடன் அடுத்த விமானத்தில் ஊருக்கு வந்து, "ஆஹா.... இங்கு பொறியாளராய் வேலை செய்வதை விட இந்தியப்பெரு நகரங்களில் போய் பிச்சை எடுக்கப் போகிறேன்" என்று ஊருக்கு போய் விட்டார் என்று தானே ?.
இல்லை ஐயா இல்லவே இல்லை!.
முடிந்த மட்டும் இந்த சுதந்திரமில்லா சொர்க்கத்து வசதியையும் பணத்தையும் வருடங்களாக அறுவடை செய்துகொண்டார். அப்புறம் வசதியாக ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டு ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்.
சின்ன வயதில் படித்த ஒரு கதைதான் ஞாபகம் வருகிறது. ஒரு திருடன் தேங்காய் திருட தென்னை மரத்தில் ஏறினானாம். பகுதி இறங்கும்போது வீட்டுக்காரன் பார்த்துவிட்டானாம்.
"டேய் திருடா, எங்கேடா ஏறுகிறாய்?."
"ஐயா புல்லு பறிக்க ஏறினேன் ஐயா ..! "
"மடையா தென்னை மரத்தில் ஏதடா புல்லு?"
"யோவ், அதனாலதானே இறங்கறேன் ..!" என்றானாம் திருடன்.
ஆரம்பிக்கும் பொழுது "இஸ்லாமிய வெறுப்பு" காரணமில்லை என்று விட்டு, ஹிந்துத்துவ பார்ப்பன வெறி மலர் மன்னன், நேச குமார், டோண்டு போன்ற இஸ்லாத்தின் மீது காறித்துப்ப வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாக கோண்ட பார்ப்பன அடிவருடி சங்க்பரிவார கும்பலை பின்னூட்டத்தில் அனுமதித்து அதற்கு ஏற்றாற் போல் ஜல்லி அடித்துக் கொண்டிருப்பதிலிருந்தே தெரிகிறது - "இஸ்லாமிய வெறுப்பு காரணமில்லை" என்ற இவருடைய வாக்கியத்தின் நம்பகத்தன்மை.
சில நேரங்களில் இவர்களுக்கெல்லாம் "விடாது கருப்பு" பாணியில் பதிலிட்டால் தான் மண்டையில் ஏறும் போல் தெரிகிறது!.
சரி போகட்டும்....!
நம்முடைய "பெண்கற்பு புகழ்" சகோதரர் டோண்டு அவர்கள் சொன்னது போல சில அரேபியர்களுக்குத் திமிர் கொஞ்சம் அதிகம்தான். திமிர் என்பது ஐயங்கார் வாளுக்கு மட்டுமே சொந்தமா என்ன?
என்ன ஒரு வித்தியாசம் பாருங்கள். அவன் திமிர் செல்வத்தால் ஆனது. மதத்தினால் அல்ல. இந்த டோண்டு அய்யங்கார் வகையறாத்திமிரோ......? நான் மட்டும் என்னுடைய மதத்திலேயே உள்ளவனை மலம் சுமக்கவும் எனக்குத் தலைமுறை தலைமுறையாய் அடிமை செய்யவும், பெண்டாளவும், பெண்கள் மார்பு மறைத்தால் தண்டனை கொடுத்து மறைக்க விடாமல் செய்து ஜொள்ளுவிடவும் வகைச் செய்யும் மதத்திமிர். இப்பொழுதுதான் சகோதரர் தங்கமணி போன்றோர்கள் சிந்திக்க தொடங்கியுள்ளார்கள். இருக்கட்டும்.
அரேபியாவில் எல்லா நாடுகளையும் போல் எல்லாவித மனிதர்களும் உள்ளனர் என்ற சாதாரண உண்மை மெத்த படித்த மேதாவிகளுக்கே கூட தெரியவில்லை. சிவாவுடன் வேலைசெய்யும் அறபி சென்னையில் கால்காரி சிவா வீட்டில் தங்க மறுத்து ஸ்டார் ஒட்டலில் தங்கிவிட்டானாம். அது அவருக்கு அவமானமாகப் போயிற்றாம். அடா! அடா! அடா! ஒரு தடவை அறபி இவர் வீட்டில் தங்க மறுத்த அவமானத்தை பொறுக்க முடியவில்லை இந்த மானஸ்த்தனால். ஆனால் காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக வீட்டு முற்றத்தையே மிதித்தால் தீட்டு பட்டுவிடும் என்று ஒரு சமூகத்தையே அடக்கி ஆர்ப்பரித்த இந்த கைபர் போலன் கணவாய் வழி ஆடு மேய்த்து வந்த வந்தேறி கூட்டத்திற்கு – வாழ்க்கை முழுவதும் அவமானமே ஆகிப்போன எளியோர்களின் மனக்காயம் எப்படி இருக்கும் என்று உணர கிடைத்த அடியாகவோ அல்லது வாய்ப்பாகவோ தானே இந்த டோண்டு வகையறாக்கள் இந்த நிகழ்வை எடுத்துக்கொள்ள வேண்டும்?. அப்படி ஒரு அடி கொடுத்து இந்த பார்ப்பன கூட்டத்தை சிந்திக்க வைத்த அந்த அறபிக்கு ஒடுக்கப்பட்ட மக்களே நன்றி சொல்லுங்கள். (உண்மையிலேயே மதத்தின் பெயரால் மற்றவர்களை அடக்கி ஒதுக்கிய இந்த பார்ப்பன கூட்டத்தைச் சேர்ந்த டோண்டு & கோவிற்கு ஒதுக்கப் படுவதால் மனதில் ஏற்படும் காயத்தின் வலியினை உணர்ந்திருந்தால்)
சரி, அப்படியே 99 சதவீதம் அறபிகளும் கொடுமையானவர்களாக இருக்கட்டுமே. (இதில் எந்த அளவு உண்மை என்பது தினமும் ஆயிரக்கணக்கில் இந்த சுதந்திரமில்லா சொர்க்கபூமியில் வந்து இறங்கும், இறங்க காத்துக்கொண்டிருக்கும் இந்திய - சகோதரர் டோண்டு அவர்களின் மொழியில் சொன்னால் துரதிஷ்டசாலிகள் - குடிமகன்கள் சாட்சி). அது நியாயவான்களுக்கு மட்டுமே சொல்லத்தகுதி உடையதல்லவா? நான் என் சகோதரனை அன்னியப்படுத்துவேன். அவனை மலம் சுமக்கச் சொல்வேன். அவன் வைக்கும் சாப்பாட்டை உதறித்தள்ளுவேன். அவன் என் மதத்தவனாயினும் நான் வழிபடும் தெய்வத்தின் அடுத்துச் சென்றால் தீட்டுக்குப் பரிகாரம் செய்வேன். தேவைப்பட்டால் ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்றுவேன். அவன் தோலையும் பசுத்தோல் போல் உரிப்பேன். என்னுடைய ரேஞ்சுக்கு உயர ஏதாவது குறுக்கு வழிகள் மூலம் அவன் முயற்சி செய்தால் ராம ராஜ்ஜியத்தினை கொண்டு வந்து அந்த ராமரைக் கொண்டே அவன் தலையையும் வெட்டுவேன். உயிரோடு அப்பாவிகளை தீயிலிட்டுக்கொளுத்துவேன். பாவமறியா பிஞ்சு மதலைகள்(அது கர்ப்பத்தில் இருந்தாலும்) உட்பட. இவை எல்லாம் என் வேதத்திலுமிருக்கிறது. (கவனிக்க இப்படிப்பட்ட எந்த நல்ல(!) காரியங்களும் இந்த சு.சொ. பூமியின் அறபிகளுக்கிடையில் மதத்தின் பெயரால் நடைபெறுவதில்லை.) அப்படிப்பட்ட பார்ப்பன் நான். என்னையும் என் அடிமையையும் இந்த அறபிகள் எப்படி ஒன்றாக நடத்தலாம்?. இந்த வயித்தெரிச்சலில் தானே அந்த ஒப்பாரி. எனக்கு இரண்டு காலிலும் யானைக்கால். நான் ஒருவிரலில் வீக்கமுள்ளவனை குறை கூறுவது முட்டைக்கு மயிர் பிடுங்கும் மூடத்தனமல்லவா?
அந்த கேடுகெட்ட(இவர் சொல்வது உண்மையெனில், அவனுக்கு இதை விட மோசமான வார்த்தைகள் தான் பயன்படுத்த வேண்டும்) அறபிக்கு துணை நடிகையின் கற்பு மலிவாக கிடைத்ததாம். அதாவது அவன், அவன் நாட்டில் இப்படி செய்தால் சவுக்கடி(திருமணம் புரிந்தவன் எனில் சாவு)க்கு பயந்து இங்கு வந்து விபசரித்திக்கிறான். இவர் கூற்று உண்மையாயிருக்கும் பட்சத்தில், அவன் குற்றம் செய்திருக்கிறான். அல்லது நாம் அவனை குற்றம் செய்ய அனுமதித்திருக்கிறோம். அதற்கு அவனுக்கு இங்கு வாய்ப்பு இருந்திருக்கிறது. நம்முடைய இந்திய சகோதரியின் கற்பு அவனுக்கு மலிவாக கிடைத்திருக்கிறது வாங்கிகொண்டான். ஏன் பிரேமானந்தாவிற்கு இதைவிட மலிவாக கிடைத்ததே அவர் வாங்கவில்லையா?. டாக்டர் பிரகாஷுக்கு குடும்ப கற்பெல்லாம் கூட கிடைத்ததே? என்ன கொஞ்சம் காஸ்ட்லி. ஏன் பெரியவாளின் காஞ்சி மடத்திலும் அவாள் கற்பெல்லாம் நர்த்தனம் புரிந்ததாமே? எனக்கு தெரியாதையா நக்கீரனார் சொன்னார். ஆக இங்கு கற்பு கத்தரிக்காயைவிட மலிவு, அதனால் வாங்கிகொண்டான். அவன் நாட்டில் நினைத்தாலே சவுக்கடி. இங்கு நினைக்கும் முன்னே அவனைப் போன்றவர்களின் முன் பிச்சைக் காசிற்கு ஆசைபட்டு, நம் சகோதரிகளின் கற்பினை கடை விரிக்க பெண் வயிற்றில் பிறக்காத காவேலிகள் ஏராளம். இப்பொழுது கூறுங்கள். நீங்கள் உண்மையிலேயே அந்த சகோதரிக்கு அனுதாபப்படுவதாயிருந்தால்...! அன்பரே வாருங்கள்...! வந்து (தேசியவாதத்தைக் குறித்து வாய் கிழிய பேசி அப்பாவிகளை ஏமாற்றும் பாகிஸ்தானில் பிறந்த ர(த்)த யாத்திரைப் புகழ் அத்வானிஜியும் கூறுவது போல்) நமது நாட்டுச் சட்டத்தை மாற்றச் சொல்லுங்கள். இந்த ஆயிரமாயிரம் சகோதரிகளும் அவர் குழந்தைகளும் ஜன்மத்துக்கும் நன்றியுடையவர்களாய் இருப்பார்களையா...இருப்பார்கள்.
எவ்வளவு சீக்கிரம் இதனை நாம் செய்கிறோமோ அவ்வளவுக்கு நமது சகோதரிகளின் கற்புக்கு பாதுகாப்பு கிடைக்கும். இல்லையெனில், அடுத்த முறை அறபி அல்ல அமெரிக்கன் வந்தாலும் கத்தரிக்காய்க்குப் பதில் கற்பைத்தான் வெகு இலகுவாக வாங்குவான்.
அரேபியாவில் கோயில் கட்டக் கேட்டிருக்கிறீர். ஒரு வாததிற்காக சரி என்று வைத்துக் கொண்டாலும், யாருக்கு கோயில்? எத்தனைக் கோயில்கள்? எப்படி நியாயப்படுத்துவது ?.
இது பார்ப்பானின் கோயில். இது தலித்தின் கோயில். தலித் பார்ப்பானின் கோயிலின் அருகிலேயே வரக்கூடாது. அவன் நான் ஓதும் வேதத்தை கேட்கக்கூடாது. கேட்டால் ஈயம் தான். ஆனாலும் இரண்டு பேரும் ஒரே மதம். நானும் இந்து, அவனும் இந்து(நிலை நிற்க முடியாத தருணங்களில் என் உடம்பில் காற்றுப் பட்டாலே தீட்டு என்று ஒதுக்கி வக்கப்பட்டவர்களையும் சேர்த்துக் கொண்டு தாங்கள் 2% என்பதை இந்து என்ற போர்வையில் எப்படி 85% ஆக மாற்றிக் காட்ட முயற்சிக்கிறார்கள் என்பதை சகோதரர் திருவாளர் டோண்டு அவர்களின் இப்பதிவிற்கான பின்னூட்டம் சென்று கவனியுங்கள்). இந்த லாஜிக்கை அறபிக்கு புரியவைக்க ஆண்டுகள் பல ஆகும். அதற்கிடையில் முதலில் வெளிப்படையாக பூணூலை அறுத்தெறியுங்கள். தலித் மக்களை ஆரத் தழுவிக்கொள்ளுங்கள்(உண்மையாக மாரோடு மார் சேர்த்து கூடப் பிறந்த சகோதரனைத் தழுவது போன்று). சிவனின் கோயில் சிலையை ஒரு மலம் சுமப்பவனை கொண்டு பிரதிர்ஷ்டை செய்யுங்கள். முடிந்தால் ஒருமுறையாவது என் தாழ்த்தப் பட்ட சகோதரனின் வீட்டு மலத்தினை அவாள்களைக் கொண்டு அள்ள வையுங்கள்.அப்போது ஒரு வேளை அரேபியாவில் கோயில் வேண்டும் என்றால் அதை அறபிக்கு இலகுவாக புரிய வைக்கமுடியும்.
இவர்கள் வயிற்றெரிச்சல் வேறொன்றுமில்லை. எனக்கு அடிமையாகப்பிறந்தவன் எப்படி அறேபியாவுக்குப் போய் சம்பாதிக்கலாம். மலம் சுமக்கப் பிறந்தவன் எப்படி மணம் கமழ நடமடாலாம். இந்த ஜன்மங்கள் பணம் பண்ணினாலும் பரவாயில்லை ஐயா. இங்கு வந்து
சரிசமமாக நடக்கிறான்கள். மதம் மாறிவிட்டு குல்லாவும் லுங்கியும் அணிந்து இந்தத் துலுக்கனோடு சரி சமமாக பள்ளிக்கு போகிறான்கள். அட தேவுடா...இனி நாம மடிசார அவுத்து முக்காடு போட்டு மூலையில் உக்காரவேண்டுமே என்ற பயம்.
அப்புறம், இங்கு(சு.சொர்க்கத்தில்) எல்லோரும் உத்தமர்களா? இல்லை. உலகில் எப்படி எந்த நாட்டிலும் எந்த சமூகத்திலும் எப்படி எல்லோரும் உத்தமர்களில்லையோ அப்படி இங்கும் இல்லை. எல்லா வித மனிதர்களும் மனித இயல்புகளும் இங்கும் உண்டு. அனால் இங்கு சமூக அவலங்கள் இல்லை. மலம் சுமக்க தனிப்பிரிவு இல்லை. இந்தியனும் - அதில் பார்ப்பானாக இருந்தால் கூட – எகிப்தியனும் வங்காளியும் அமெரிக்கனும் ஐரோப்பாக்காரனும் கூட - அவன் தொழில் பாத்ரூம் சுத்தம் செய்வது என்றால் செய்துதான் ஆக வேண்டும். எந்த அரபியும் எந்த தலித்தையும் வீட்டுக்குள் விட மறுக்கவோ, கூட இருந்து உணவருந்தவோ தயக்கப்படமாட்டான். தீட்டு என்பது அவன் அகராதியிலேயே இல்லை.
அதனால் கனவான்களே...ஒரு வாய்ப்பு இந்த சு.சொ வர உங்களுக்குவர உங்களுக்கு கிடைத்தால் வாருங்கள். வந்து திரவியம் தேடுங்கள். இந்தப் பூச்சாண்டி காட்டுபவர் எல்லோருக்கும் கவலைப் படாதீர்கள். இவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். சொல்ல பணிக்கப் பட்டிருக்கிறர்கள். இது இந்த வகையறாக்களுக்கு இடப்பட்ட அஜெண்டா.
ஒரு விடயம் சரியா தவறா என்று இங்கு வரும் ஜனத்திரள்களைப் பார்த்து நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள். இவர்கள் கத்துவார்கள், கதறுவார்கள், மலர் மன்னன் போன்ற மானிடப்புழுக்களை துணைக்கழைப்பார்கள்.(மஹாத்மாவை சுட்டவனை பரிசுத்தமாக்கும் இந்தப் பதரை புழு என்றால் புழுக்களுக்கல்லவா அவமானம். அதனால் தான் மானிடப்புழு என்கிறேன்.) இல்லாவிடில் தங்கமணி போன்ற அப்பாவிகளை நிலை நிறுத்துவது கடினமாகிவிடும்.
சரி அதெல்லாம் இருக்கட்டும். எனக்கு ஏன் அரேபியா மேல் இவ்வளவு பாசம் என்கிறீர்களா?
அட போப்பா! கைபர் போலன் வழி வந்தேறிய ஆரிய பார்ப்பனக் கூட்டத்தைச் சேர்ந்த சகோதரர் "பெண் கற்பு புகழ்" டோண்டு அவர்களுக்கே ஒரு காரணமும் இன்றி உலகின் இன்றைய பிரச்சனைகளுக்கெல்லாம் ஆதிமூலம் இஸ்ரேல் மீது அளவில்லா பாசம் இருக்கும்போது(ஒரு வேளை இவர்கள் உலக நாச காரணி யூதப் பரம்பரையினராக இருக்குமோ?), எனக்கு கீழ்க்கண்ட காரணிகளுக்காக அரேபியா மீது பாசம் இருக்கக் கூடாதா என்ன?
எத்தனையோ ஏழை எளிய மக்களை செல்வந்தராக்கியிருக்கிறது இந்த மண். எத்துணையோ தாழ்த்தப் பட்டவருக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறது இந்த மண். சுதந்திரம் என்றால் கல்காரியின் சுதந்திரம் அல்ல. அடிமைத்தளைக்கு சுதந்திரம். ஜன்மத்திற்கு சுதந்திரம். பிறவிக்கு சுதந்திரம். எத்தனையோ காட்டுமிராண்டித்தனதிற்கு ஆப்பு வைத்திருக்கிறது இந்த மண். எத்தனையோ குடும்பத்திற்கு விளக்கேத்தியிருக்கிறது இந்த மண். என் தாய் நாட்டிற்கு பெரிய அளவில் அந்நியச்செலவாணியை கொடுத்திருக்கிறது இந்த மண். உங்கள் ஊரில் கொஞ்சம் காலாற நடந்து போய் பாருங்கள். வளை குடாவில் சம்பாதித்த/சம்பாதிக்கும் எளியோரை கணிசமாக காணலாம்.
எல்லாவற்றிற்கும் மேலாக ஐந்தாறு தலை முறைகளுக்கு முன்னால் பறையனாகவோ , பள்ளனாகவோ, புலையனாகவோ, சூத்திரனாகவோ இருந்த என் முப்பாட்டனை மனம் மாற்றி தன்னகத்தே கொண்டு வந்து இன்று என்னை எந்தக்கொம்பனுக்கும் எந்தவித அந்தஸ்திலும் குறைந்தவனில்லை என்று மார் தட்டி, தோளுயர்த்தி, முரசு கொட்டி(ச்சே! கொஞ்சம் உணர்ச்சி கூடுதலாய் போயிற்றோ... ? சரி பரவாயில்லை விடுங்கள்..!)மனிதனாக வாழவைத்த வாழவைக்கும் என் இனிய இஸ்லாம் தோன்றிய இடம். எனது தாய் நாட்டிற்கு அடுத்து நான் மிகவும் நேசிக்கும் நாடு.
இது போதாது - எந்த கேடுகெட்ட அறபியாவது என்ன ஈனத்தனமான செயல்கள் செய்திருந்தாலும் அம்மண்ணை நேசிக்க!





