27 November 2007

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...10.

சுரேஷ் ரிச்சர்ட் என்பவன் மோடியை பற்றி கூறும் போது, “நீங்கள் எல்லோரும் சிறப்பானவர்கள் என்று அவர் எங்களுக்குக் கூறினார்”என்றான்.

தனிப்பட்ட முறையில் ரிச்சர்டைப் பாராட்டி வாழ்த்துக்களை மோடி தெரிவித்த போது, மிகச் சிறப்பாக வேலைகளை (இன படுகொலை, கற்பழிப்பு, கொள்ளை....) செய்து முடித்ததாக ச்சாரா இனத்தையும் புகழாரங்கள் பொழிந்துப் பாராட்டினார்

சுரேஷ் ரிச்சர்ட் தெஹல்காவுடன் மோடி தொடர்புடைய உரையாடலின் போது....

சுரேஷ் ரிச்சர்ட்: (படுகொலை நடந்த நாளில்) என்னென்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவைகள் அனைத்தையும் மாலையின் கடைசி பொழுது வரை முழுமையாகச் செய்தோம்...7:30 மணியளவில்....கிட்டதட்ட 7:15 எங்களுடைய மோடி பாய் வந்தார்.....வீட்டின் வெளியே, இதே இடத்திற்கு.... எனது சகோதரிகள் ரோஜாக்களால் செய்த மாலை அணிவித்தனர்.

தெஹல்கா: நரேந்திர மோடி....

ரிச்சர்ட்: நரேந்திர மோடி....அவர் கருப்பு பூனை அதிரடி படையினருடன் வந்தார்.....தனது அம்பாஸிடர் காரிலிருந்து வெளியேறி இங்கு வரை நடந்து வந்தார்....எனது சகோதரிகள் எல்லோரும் அவருக்கு மாலை அணிவித்தார்கள்...... என்ன இருந்தாலும் பெரிய மனிதன் (?) பெரிய மனிதன் தான்.

தெஹல்கா: அவர் தெருவிலா வந்தார்?

ரிச்சர்ட்: இங்கே, இந்த வீட்டின் அருகே.... பிறகு இந்த வழியாகச் சென்றார்....நரோடாவில் எப்படி உள்ளது என்பதைப் பார்த்தார்.....

தெஹல்கா: பாட்டியாவில் வன்முறை சம்பவங்கள் நடந்த நாளன்றா?

ரிச்சர்ட்: அதே மாலை

தெஹல்கா: பிப்ரவரி 28

ரிச்சர்ட்: 28

தெஹல்கா: 2002

ரிச்சர்ட்: இங்கே அவர் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்தார்... எங்கள் இனம்(ச்சாரா) சிறப்பானது எனக் கூறினார்.....எங்கள் தாயார்களும் சிறப்பானவாகள் (எங்களைச் சுமந்ததால்) ..

தெஹல்கா: அவர் வந்தது 5 மணியளவிலா அல்லது 7 மணியளவிலா?


ரிச்சர்ட்: கிட்டதட்ட 7 அல்லது 7:30.... அந்த நேரத்தில் மின்சாரம் கிடையாது..... வன்முறை கலவரத்தால் எல்லாம் எரிந்து சாம்பலாகிப் போனது......

• • •

தெஹல்கா: நரேந்திர மோடி அன்றைய தினம், நரோடா பாட்டியா படுகொலைகள் நடந்த தினத்தில் உங்கள் வீட்டுக்கு வருகை தந்து விட்டுப் போன பின்பு, அதன் பிறகு எப்போவாவது உங்கள் வீட்டுக்கு மீண்டும் வருகை தந்தாரா?

ரிச்சர்ட்: ஒரு போதும் இல்லை

ராஜேந்திர வியாஸ் என்பவன் மோடியைப் பற்றிக் கூறும் போது, “பழிவாங்குவது என்பதே அவருடைய உறுதிமொழியாக இருந்ததுஎன்றான்.

கோத்ரா சம்பவத்திற்குப் பிறகுத் தாங்க முடியாத துயரில் இருந்த அஹ்மதாபாத் விஹெச்பி தலைவர் மோடியிடம் இருந்து எல்லாம் பார்த்து கொள்ளபடும் என்ற வார்த்தைகளைப் பெற்றுக் கொண்டார்.

ராஜேந்திர வியாஸ் தெஹல்காவுடன் மோடி தொடர்புடைய உரையாடலின் போது....

தெஹல்கா: நரேந்திர மோடி பற்றி.... நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்...அவருடைய முதல் வார்த்தைகள் என்னவாக இருந்தது (கோத்ரா ரயில் சம்பவத்திற்குப் பிறகு)? உங்கள் அனைவர்களிடமும் அவர் என்ன சொன்னார்?.

ராஜேந்திர வியாஸ்: முதலில் அவர்(மோடி) சொன்னது என்னவென்றால் நாம் பழிவாங்க வேண்டும்...... நான் எதை பொதுவிடத்தில் வைத்து சொன்னேனோ அதையே.... அதன் பிறகு எதையும் நான் சாப்பிட கூடவில்லை.... ஒரு துளி தண்ணீர் கூடப் பருகவில்லை.... எத்தனையோ பேர் இறந்து விட்டார்களே என்று நான் கடுமையான கோபத்தில் இருந்தேன், கண்ணீர் எனது கண்களிலிருந்துப் பெருகி ஓடியது..... ஆனால் எனது பலத்தைக் காட்ட ஆரம்பித்ததும்.... திட்ட ஆரம்பித்ததும்... அமைதியாக இருங்கள் எல்லாம் கவனித்து கொள்ளப்படும் என்று அவர் (மோடி) சொன்னார்.... எல்லாம் கவனித்து கொள்ளப்படும் என்று அவர் (மோடி) சொல்வதன் அர்த்தம் என்ன?.....அவைகள் எல்லாமே புரிந்தது, புரிந்து விட்டது.....!

பகுதி 4 நிறைவடைந்தது. இன்ஷா அல்லாஹ் பகுதி 5 விரைவில்..

24 November 2007

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...8.


கோத்ரா MLA வான ஹரேஷ் பட் மோடியைப் பற்றிக் கூறும் போது, "எந்த ஒரு முதலமைச்சரும் எக்காலத்திலும் செய்ய முடியாததை மோடி செய்தார்" என்றுக் கூறினான்.

ஹரேஷ் பட் தெஹல்காவுடன் மோடி தொடர்புடைய உரையாடலின் போது....

தெஹல்கா: கோத்ரா சம்பவம் நடந்த போது, நரேந்திர மோடி உடைய உணர்வுகள் எவ்வாறு இருந்தது?

ஹரேஷ் பட்: அதை நான் உனக்குச் சொல்ல முடியாது.....ஆனால் அது சாதகமாக இருந்தது என்று மடடும் நான் சொல்ல முடியும்......புரிந்துணர்வின் காரணமாக அந்த நேரத்தில் நாங்கள் பரிமாறிக் கொண்டோம்.

தெஹல்கா: எனக்குச் சிலவற்றை கூறுங்களேன்.... அவர்.......

ஹரேஷ் பட்: நான் பேசப்பட்ட விஷயங்களைத் தரமுடியாது.....ஆனால் எந்த ஒரு முதலமைச்சரும் எக்காலத்திலும் செய்ய முடியாததை மோடி செய்தார்.

தெஹல்கா: நான் எங்கேயும் அதை மேற்கோளாகக் காட்ட மாட்டேன்....அந்தக் காரணத்திற்காக....நான் உங்களிடம் கூட மேற்கோளாகக் காட்ட போவதில்லை.

ஹரேஷ் பட்: நாங்கள் என்னென்ன செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் செய்வதற்கு 3 நாட்களைக் கொடுத்தார். இம் மூன்று நாட்களுக்குப் பிறகு தன்னால் மேலும் அதிகமான நேரம் எதையும் தரமுடியாது என்றும் சொன்னார்.....இதை வெளிப்படையாகவே சொன்னார்.....மூன்று நாட்களுக்குப் பிறகு நிறுத்துமாறு அவர் எங்களைக் கேட்டு கொண்டார், எல்லாம் நிறுத்தப்பட்டது.

தெஹல்கா: மூன்று நாட்களுக்குப் பிறகு தான் அது நிறுத்தப்பட்டது....இராணுவமும் கூட அழைக்கப்பட்டதே...

ஹரேஷ் பட்: எல்லா படைகளும் வந்தது.... எங்களுக்கு மூன்று நாட்கள் கிடைத்தது..... அந்த மூன்று நாட்களில் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தோம்........

தெஹல்கா: அவர் அதைச் சொன்னாரா?

ஹரேஷ் பட்: ஆம்....அதனால் தான் நான் சொல்லுகிறேன் , எந்த ஒரு முதலமைச்சரும் செய்ய முடியாததை அவர்(மோடி) செய்தார்...

தெஹல்கா: அவர்(மோடி) உங்களிடம் பேசினாரா?

ஹரேஷ் பட்: நாங்கள் ஒரு சந்திப்பில் கலந்துக் கொண்டோம் என்று உங்களிடம் சொன்னேனே?

......

ஹரேஷ் பட்: அவர் அரசை நடத்த வேண்டியுள்ளது....இப்போது அவர் சந்திக்கும் கஷ்டம்....அதிகமான வழக்குகள் மீண்டும் திறக்கப்படடுள்ளது...மக்கள் அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளார்கள...

தெஹல்கா: பாஜகவில் உள்ளவர்கள் அவருக்கு எதிராக வெறுப்படைந்துள்ளார்கள்....

ஹரேஷ் பட்: பாஜகவில் உள்ளவர்கள்... எதுவெல்லாம் அவர் செய்துள்ளாரோ அது அவரை வாழ்வில் மிக உயாந்தவராக ஆக்கியுள்ளது. அதனை மற்ற அரசியல்வாதிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை...

நானாவதி-ஷா ஆணையம் முன்பு அரசாங்கச் செயல்பாடுகளை நியாயப்படுத்த அரசின் சட்ட ஆலோசகராக நரேந்திர மோடியால் நியமிக்கப்பட்ட அரவிந்த் பாண்ட்யா மோடியைப் பற்றி கூறும் போது, "மோடி மட்டும் அமைச்சராக இல்லாது இருந்திருந்தால், அவரே வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்திருப்பார்" என்றுக் கூறினான். மோடியைப் பற்றிய புகழ்ந்துரையில் அரவிந்த் பாண்ட்யா மேலும் கூறும் போது, குஜராத்தின் முதலமைச்சர் ஹிந்து சமாஜின் புதியக் காவலர் என்று வர்ணித்தான்.

அரவிந்த் பாண்ட்யா தெஹல்காவுடன் மோடி தொடர்புடைய உரையாடலின் போது....

அரவிந்த் பாண்ட்யா : (கோத்ரா முஸ்லிம்கள்) தாங்கள் செய்தவை அப்படியே சென்று விடும் என எண்ணினார்கள். காரணம், இயற்கையில் குஜராத்திகள் மென்மையானவர்கள். முன் காலங்களில் அவர்கள் குஜராத்திகளை அடித்துள்ளார்கள்; அவர்கள் உலகத்திலுள்ளவர்களை கூட அடித்துள்ளார்கள். ஆனால் எவரும் அவர்களுக்கு எதிராக எவ்வித தைரியத்தையும் காட்டவில்லை... ஒரு போதும் அவர்களைத் தடுத்ததில்லை... முன்னரெல்லாம் அவர்கள் பிரச்சனைகள் செய்யும் போது எவ்விதச் சிரமமும் இல்லாமல் சென்று விடுவதை போன்று இந்த முறையும் சென்று விடும் என எண்ணினார்கள். முன்பு இங்கே காங்கிரஸ் ஆட்சி செய்தது... அவர்கள் ஓட்டைப் பெறுவதற்காக காங்கிரஸ் குஜராத்திகள் மற்றும் ஹிந்துக்களை அடக்கியது... ஆனால் இந்த முறை அவர்கள் செமையாக அடித்து நையப் புடைக்கப்பட்டார்கள்... இப்பொழுது இங்கே ஹிந்து ஆட்சி நடைபெறுகிறது... குஜராத் முழுவதும் ஹிந்துக்களால் ஆட்சி நடத்தப்படுகிறது. இன்னும் அது கூட விஹெச்பி மற்றும் பாஜகவில் உள்ளவர்களிலிருந்து நடத்தப்படுகிறது....

தெஹல்கா: அவர்கள் தப்புக் கணக்கு போட்டுவிட்டார்கள்...

பாண்ட்யா : இல்லை, என்ன நடந்திருக்கும்....ஒருகால் இது காங்கிரஸ் அரசாக இருந்திருந்தால், அவர்கள் ஒருகாலும் ஹிந்துக்கள் முஸ்லிம்களை அடிப்பதற்கு அனுமதித்திருக்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் நிர்வாகப் பலத்தை பயன்படுத்தி ஹிந்துக்களை கீழே இழுத்துப் போடவே முயன்றிருப்பார்கள்... அவர்கள் முஸ்லிம்களைக் கலவரத்திலிருந்து ஒரு போதும் தடுத்திருக்க மாட்டார்கள்... அவர்கள் ஹிந்துக்களை அமைதி காக்கும் படிக் கூறியிருப்பார்கள். ஆனால் அவர்களைத் (முஸ்லிம்களை)தொடுவதற்கு கூட ஒன்றும் செய்திருக்க மாட்டார்கள்... இது போன்றச் (கோத்ரா) சந்தர்பங்களின் போது கூட ஒன்றும் செய்திருக்க மாட்டார்கள்.... ஆனால் இந்தச் சமயத்தில் ஹிந்து அடிப்படை(வாத) அரசாங்கம் உள்ளது... எனவே மக்களும் தயாரானார்கள். இன்னும் மாநில அரசும் தயாரானது.... இது இரகசியமாக உருவாக்கப்பட்டு கண்டும் காணாதிருப்பதுப் போல் நடந்த நல்லதொரு ஆதரவு.

தெஹல்கா: இது ஹிந்து சமுதாயத்திற்க்கும், ஹிந்து சமாஜ் முழுமைக்கும் கிடைத்த நல்லதொரு அதிஷ்டம்.

பாண்ட்யா : சொல்லுங்கள், ஆட்சியாளரும் உறுதியான குணம் படைத்தவராய் இருந்தார். ஏனெனில் பழிவாங்க வாய்ப்பளித்தார். இன்னும் நானும் தயார்... நாமெல்லாம் கல்யாண் சிங்குக்கு தான் முதல் முதலில் மரியாதை செய்ய வேண்டும் . ஏனெனில் உச்ச நீதிமன்றத்தின் முன்பாக எல்லாம் நான் தான் செய்தேன்; நான் தான் கட்சி என்று கூறி எல்லா வகையான பொறுப்பையும் தான் ஏற்றுக் கொண்டார்...

தெஹல்கா: பின்னால் அவர் கட்சியை விட்டு மாறிய போது...

பாண்ட்யா : அவர் செய்தார். ஆனால் அவர் தான் முதல் முதலாக உருவாக்கியவர். அவர் உச்ச நீதிமன்றத்தில் முன்பாக தைரியமாக நின்று நான் தான் என்று கூறினார்.

தெஹல்கா: முழுபொறுப்பையும் ஏற்று கொண்டார்.

பாண்ட்யா : அதற்குப் பிறகு இரண்டாவது கதாநாயகனாய்.... நரேந்திர மோடி வந்தார். இன்னும் அவர்(மோடி) காவல்துறையினர் ஹிந்துக்களுடன் இருக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்தார். ஏனெனில் மாநிலம் முழுவதும் ஹிந்துக்களுடன் இருந்தது.

தெஹல்கா: ஐயா! பிப்ரவரி 27ல் மோடி கோத்ரா சென்ற போது விஹெச்பி தொண்டர்கள் அவரைத் தாக்கினார்களாமே, அது உண்மையா?

பாண்ட்யா : இல்லை. அவ்வாறு அவர்கள் செய்யவில்லை...அது இப்படி தான்...அங்கே 58 உடல்கள்.. அதுவும் மாலை நேரம்... நீங்கள் என்ன செய்தீர்கள் என்று மக்கள் உரிமையுடன் கேட்டார்கள்.

தெஹல்கா: காலை 8 மணியிலிருந்து மாலை வரை அங்கு வந்திறங்கவில்லை. எனவே விசயங்கள் சூடாகி விடவே, மோடிஜியும் கோபப்படடார்...

பாண்ட்யா : இல்லை அது அப்படி அல்ல.. மோடி நெடுங்காலமாக எங்கள் அணியில் தான் இருக்கிறார்... அந்த விசயத்தை மறந்து விடுங்கள்... அவர் பதவியில் இருக்கிறார். எனவே அவருக்கு நிறையக் கட்டுபாடுகள் இருக்கிறது. இன்னும் முழுமையாக சில உள்ளன. ஹிந்துக்களுக்குச் சாதகமாக எல்லா சைகைகளையும் கொடுத்ததும் அவர் தானே.. ஆட்சியாளர் உறுதியாக இருந்தால் பிறகு எல்லாமே நடக்க ஆரம்பித்துவிடும்.

தெஹல்கா: நீங்கள் சந்தித்தீர்களா... நரேந்திர மோடி 27ம் தேதி கோத்ராவிலிருந்து திரும்பிய பின்..

பாண்ட்யா : இல்லை, இந்தக் கேள்விக்கு பதிலளிக்க மாட்டேன்.... நான் பதிலளிக்கக் கூடாது.

தெஹல்கா: ஐயா! அவருடைய (மோடி) உணர்வுகள் முதலில் எவ்வாறு வெளிப்பட்டது என்பதை அறிய விரும்புகிறேன்.

பாண்ட்யா : நரேந்திர மோடி தொலைபேசி மூலமாக இதை அறிந்த போது அவருடைய இரத்தம கொதித்தது... சொல்லுங்கள் வேறு என்ன சொல்ல முடியும்... உங்களுக்குச் சிலக் குறிப்புகளைத் தந்து விட்டேன். இதற்கு மேல் எதையும் வெளிபடுத்த முடியாது அல்லது பேசக் கூடாது.

தெஹல்கா: இதை தான் நான் அறிய விரும்பினேன்... அவருடைய உணர்வுகள் முதலில் எவ்வாறு வெளிபட்டது...

பாண்ட்யா : இல்லை, அவரது உணர்வின் வெளிப்பாடு இவ்வாறு இருந்தது. அவர்(மோடி) மந்திரியாக இல்லாது இருந்திருந்தால் அவர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்திருப்பார். அவர் சக்தி பெற்றிருந்து, மந்திரியாகவும் இல்லாமல் இருந்திருக்குமானால், அவர் சில குண்டுகளையாவது சுகபூராவில் (அஹ்மதாபாத்தில் முஸ்லிம் அதிக அளவில் வாழும் பகுதி) வெடித்திருப்பார்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்..

22 November 2007

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...7.

மோடியை பற்றி அவர்கள் என்ன சொன்னார்கள்.

நரேந்திர மோடி எப்படி முஸ்லிம்களுக்கு எதிரானச் செயல் திட்டங்களுக்குத் தனது ஆதரவையும், ஒப்புதலையும் அளித்தான் என்பது பற்றி பாஜக, RSS, விஹெச்பி மற்றும் பஜ்ரங்தள் ஆகிய சங்பரிவார அமைப்புகளைச் சார்ந்த முக்கிய நபர்கள் வெளிப்படையாகவே பேசினார்கள்.

மேலோட்டம்

கோத்ரா சம்பவத்திற்குப் பின், நரேந்திர மோடியின் கோபம் தெளிவாக அறியக் கூடியதாக இருந்தது. அவன் (மோடி) பழிதீர்க்கச் சபதம் செய்தான். பஜ்ரங்தள் உடைய தேசிய ஒருங்கிணைப்பாளரான ஹர்சத் பட் என்பவனும் ஒருவனாக கலந்துக் கொண்ட ஒரு சந்திப்பின் போது நரேந்திர மோடி, "அடுத்த மூன்று தினங்களுக்கு அவர்கள் என்னென்ன செய்ய விரும்புகிறார்களோ அவை அனைத்தும் செய்து கொள்ளட்டும்" என்று (மோடி)சொல்லியுள்ளான். அதன் பிறகு அவன் எங்களை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டான். அனைத்தும் நிறுத்தப்பட்டது என பட் தெரிவித்தான்.

அஹ்மதாபாத் நகர விஹெச்பி தலைவனான ராஜேந்திர வியாஸ்க்கு மோடி ஆறுதல் கூறும் போது, "ராஜேந்திர பாய் அமைதியாக இருங்கள். எல்லாம் பார்த்துக் கொள்கிறேன்" என்று ஆறுதலளித்தானாம்.

மோடியின் அரசு, வன்முறை கும்பல்களுக்கு அவர்களின் வெறி கொண்டத் தாக்குதல்கள் எவ்விதத் தடங்கலும் இல்லாமல் நடத்திட அனுமதித்ததோடு மட்டுமல்லாமல், குற்றம் செய்தவர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து பாதுகாப்பதற்கும் முயன்றது. நரோடா பாட்டியா வழக்கில் முக்கிய குற்றவாளியான பாபு பஜ்ரங்கி என்பவன் மவுண்ட் அபுவிலுள்ள குஜராத் பவனில் தங்குவதற்கு நரேந்திர மோடியே எல்லா ஏற்பாடுகளையும் செய்ததோடு, அவனுக்கு பெயில் கிடைக்க உதவிடும் வகையில் இரண்டு நீதிபதிகளையும் மாற்றம் செய்துள்ளான்.

குஜராத் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தால், காவல்துறையினர் ஹிந்துக்களுக்கு சார்பாக நடந்து கொள்ள வேண்டும் என மோடி உத்தரவிட்டதால், அது கலவரக்காரர்களுக்கு எவ்வித கட்டுபாடும் இல்லாமல் சுதந்திரமாக மூன்று நாள்கள் செயல்பட உதவியது. எதுவரையில் என்றால் இராணுவம் வரவழைக்கப்பட வேண்டும் என்னும் அதிகப்படியான நெருக்குதல்கள் மேலிட்டத்தில் இருந்து வரும் வரையிலுமாகும்.

நரோடா பாட்டியாவில் நிகழ்நத மனித இனப்படுகொலைகளுக்குப் பின்னர், முதலமைச்சரே சம்பவ இடத்திற்குச் சென்று, நரோடா பாட்டியா படுகொலைகளில் முக்கியமாக பங்கெடுத்தச் சாரா இன மக்களின் செயல்பாடுகளை "நியாயமானதே" என அங்கீகரித்தான்.

மோடியின்